மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் செரம்பூரில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 40 திருணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திருணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், எங்கள் கட்சியில் இருந்து யாரும் பாரதிய ஜனதாவில் இணைய மாட்டார்கள் எனவும், ஒரு கவுன்சிலர் கூட பாஜகவுக்கு செல்ல மாட்டார் என்றும் தெரிவித்தார்.
பரப்புரை என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி குதிரை பேரம் செய்து வருகிறார் எனவும் டெரிக் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க போவதாகவும் அவர் கூறினார்.