ETV Bharat / bharat

ஏஎன்-32 விமான விபத்து - 13 பேரும் பலி

டெல்லி: அருணாச்சலப் பிரதேசம் அருகே மாயமான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துவிட்டதாக விமானப்படை அறிவித்துள்ளது.

AN-32 flight
author img

By

Published : Jun 13, 2019, 2:12 PM IST

Updated : Jun 13, 2019, 2:20 PM IST

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படை தளத்திலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் ஜூன் 3 ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. இதில் எட்டு விமானப்படை வீரர்கள், ஐந்து பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணித்தனர். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மெச்சுக்கா பாதுகாப்புப்படை தளத்திற்குச் செல்லும் வழியில் திடீரென மாயமான இந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவந்தது. இதில் இந்திய விமானப்படை, கப்பற்படை போர் விமானங்கள், ஏ.எல்.ஹெச் பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

விமானம் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் விமானத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்துவந்தது. தொடர்ந்து அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிக்காப்டர், காணாமல்போன விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததாக விமானப்படை இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்தது.

AN-32 flight
விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் லிபோ நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அங்கு மோசமான வானிலை நிலவியதால், விமானம் விழுந்த இடத்தை அடைவதற்கு மீட்பு படையினருக்கு கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை விபத்து ஏற்பட்ட பகுதியை அடைந்த மீட்புப் படையினர் யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா என்று தேடியுள்ளனர். அப்போது ஒருவர்கூட கிடைக்காததால், அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர்களின் குடும்பத்திற்கு இந்திய விமானப்படை உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

A-32 flight

Conclusion:
Last Updated : Jun 13, 2019, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.