சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று, தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அந்த வகையில், பள்ளிகளில் கொரனோ நோய் தொற்று பரவுவதைத் தடுக்க, கல்வி இயக்குநரகம் சில அறிவுரைகள் வழங்கியுள்ளது. இதற்காக, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் “சிறிது காலத்திற்கு ஆசிரியர்கள், பள்ளியின் பிற அலுவலர்கள் பயோமெட்ரிக் வருகைப் பதிவினை தவிர்க்க வேண்டும்.
மார்ச் இறுதி வரை மாணவர்கள் அதிகபடியாக கூடும் இறைவணக்கக் கூட்டத்தினை ஒத்திவைக்க வேண்டும். இந்த உத்தரவுகளை, அடுத்த அறிக்கை வரும் வரை பள்ளிகள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, டெல்லி அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. இடைநிலை மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: அரிசிக்கான பணம் மக்களுக்கு வழங்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ அன்பழகன்