ETV Bharat / bharat

புல்லட் ரயில் திட்டம்: அதிகரிக்கும் செலவு - பணவீக்கம்

டெல்லி: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் செலவு அதிகரித்துவரும் நிலையில், ஜப்பானிய நிறுவனத்துடன் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறு பேச்சுவார்த்தை நடத்துவதை இந்திய ரயில்வே நிராகரித்துள்ளது.

புல்லட் ரயில் திட்டம்: அதிகரிக்கும் செலவு

author img

By

Published : Jul 18, 2020, 10:51 PM IST

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான மொத்த திட்ட செலவில் 81 விழுக்காடு அளவிற்கு கடனாக ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜிகா) நிதியளிக்கிறது. இந்த அதிவேக ரயில்வே தொலைதொடர்பிற்கு ரூ 1.1 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 24 ரயில் பெட்டிகள் வாங்குவது, கட்டுமானத்தின்போது வட்டி மற்றும் இறக்குமதி வரி ஆகியவை அடங்கும்.

புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த மதீப்பீடு அதிகரிக்கும் என்பதை ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் ஏற்றுக்கொண்டார். இருந்தபோதிலும், ஜப்பானிய நிறுவனத்துடன் கடனில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செலவு அதிகரிப்பு உள்ளது, ஆனால் செலவை மறுஆய்வு செய்ய இது சரியான நேரம் அல்ல. வரலாற்று செலவின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட செலவை மட்டுமே இறுதி செய்வதால், டெண்டர்களை இறுதி செய்த பின்னர் மட்டுமே திட்ட செலவு என்ன என்பதை நாங்கள் அறிந்த கொள்ள முடியும்.

செலவு அதிகரிப்பைப் பொருத்தவரை, எந்தவொரு திட்டத்திலும் மதிப்பிடப்பட்ட செலவு எதுவாக இருந்தாலும், பணிகள் செயல்படுத்தப்படும்போது, ​​பணவீக்கம் காரணமாகவோ அல்லது வடிவமைப்பில் மாற்றம் காரணமாகவோ செலவில் ஓரளவு அதிகரிப்பு இருக்கும்.

குஜராத்தில் 77 விழுக்காடும், தாதர் நகர் ஹவேலியில் 80விழுக்காடும், மகாராஷ்டிராவில் 22 விழுக்காடும் கொண்ட இந்த அதிவேக ரயில்வே திட்டத்திற்கு தேவையான இடங்களில் இதுவரை 60 விழுக்காடு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான காலக்கெடு டிசம்பர் 2023 க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிலம் கையகப்படுத்தும் செயல்முறையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிதியாண்டில், இந்த செயல்முறை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டப்பணிக்கு தேவையான நிலத்தில் 90 விழுக்காடு நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் திட்டப் பணிகள் தொடங்கும்.

கடந்த வாரம், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், புல்லட் ரயில் திட்டத்தின் நிதி அம்சம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.