ETV Bharat / bharat

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு? - அரவிந்த் கெஜ்ரிவால் பதில் - Arvind Kejriwal latest tweet

டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று டெல்லி முதலமைசச்ர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Kejriwal
Kejriwal
author img

By

Published : Jun 15, 2020, 7:21 PM IST

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதால் தேசிய தலைநகர் பகுதியிலும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் பரவின.

இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்புகிறீர்கள். தேசிய தலைநகர் பகுதியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோருடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

டெல்லியில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,327 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு - உச்ச நீதிமன்றத்தை நாடிய நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.