ETV Bharat / bharat

சிந்தியா போன்ற நபர் எங்கள் கூட்டணியில் இல்லை - அஜித் பவார்

மும்பை: ஜோதிராதித்யா சிந்தியா போன்ற நபர் எங்கள் கூட்டணியில் இல்லை என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 13, 2020, 5:35 PM IST

BJP
BJP

மகாராஷ்டிராவில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கலந்துகொண்ட பாஜக எம்எல்ஏ சுதீர் முங்கண்டிவார், "ஜோதிராதித்யா சந்தியா போன்ற நபர்கள் மகாராஷ்டிராவில் இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

இதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், "எங்கள் கூட்டணியில் சிந்தியா போன்ற நபர் இல்லை. அவையில் இருக்கும் உங்கள் (பாஜக) எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு துரோகம் இழைத்தது நீங்கள். அது உங்கள் தவறு. உங்கள் தவறுக்கு மன்னிப்பு கிடையாது" என்றார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 20ஆம் தேதிக்கு பதில் மார்ச் 14ஆம் தேதியே முடிவடைகிறது. கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதிலும் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்பிஆரில் 'டி' இல்லை - அமித் ஷா விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.