இந்திரா கேண்டீனைப் பராமரிப்பது மீண்டும் பிபிஎம்பிக்கு பிரச்சினையாகியுள்ளது. கடந்த ஏழு மாதங்களில், செஃப் டாக் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை பிபிஎம்பி செலுத்தவில்லை. இதனால் இந்திரா கேண்டீனில் மதிய உணவு, காலை உணவு ஆகியவற்றில் ஒரே ஒரு மெனு மட்டுமே உள்ளது.
இது குறித்து செஃப் டாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோவிந்த் பூஜாரி ஈ டிவி பாரத் செய்திகளிடம் கூறுகையில், '' மார்ச் மாதத்திற்கு முன்னதாக செஃப் டாக் நிறுவனத்திற்கு பிபிஎம்பி 18 கோடி ரூபாய் கடன் செலுத்த வேண்டும். இதனால் கேண்டீனில் இட்லி, சட்னி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வேலைகளிலும் ஒரே மெனுவே பரிமாறப்படுகிறது'' என்றார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பின், செஃப் டாக் நிறுவனத்திற்கு 94 வார்டுகள் இந்திரா கேண்டீனால் குத்தகைக்கு விடப்பட்டது. 75 வார்டுகள் ரிவார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 44 வார்டுகள் அதாம்யா சேத்தனா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. புதிய ஒப்பந்தத்தின்படி, இந்திரா கேண்டீனில் பரிமாறப்படும் மெனுக்கள் மாற்றப்பட்டன. ஆனால் அதனை அந்த மூன்று நிறுவனங்களும் செயல்முறைபடுத்தவில்லை.
செஃப் டாக் மற்றும் ரிவார்ட்ஸ் நிறுவனங்கள் 62 ரூபாய்க்கு மதிய உணவு மற்றும் காலை உணவினை வழங்கி வருகின்றனர். அதில் 32 ரூபாய் அரசு சார்பாக மானியம் வழங்கப்படுவதால், மக்களுக்கு 25 ரூபாயில் உணவு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அரசு சார்பாக வழங்கப்படும் மானியம் 30 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பது மோடியின் அறியாமை அல்ல - வேறொரு காரணத்தை சொல்லும் ராகுல் காந்தி