எண்ணெய் நிறுவனங்கள் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைத் தொடர்ந்து உயர்த்திவருகின்றன. கடந்தாண்டு ஜூலை மாதம் 494.35 ரூபாய்க்கு விற்பட்ட ஒரு சமையல் எரிவாயு சிலண்டர் தற்போது 594 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து விழ்ச்சியடைந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ஊரடங்கின் காரணமாக பொருளாதார ரீதீயாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, சிலிண்டர் விலையை உயர்த்தாமல் இருந்திருந்தால், அவர்களின் செலவுகளில் 100 ரூபாய்க்கும் மேல் குறைந்திருக்கும்.
நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தின் (டிபிடி) கீழ், ஒரு வருடத்தில் ஒரு வீடு பயன்படுத்தும் 12 சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. நுகர்வோர் சந்தை விகிதத்தில் சமையல் எரிவாயுவை வாங்கும்போது, கணக்கிடப்பட்ட மானியத் தொகை நேரடியாக அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு, உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவற்றால், மத்திய அரசு இந்தாண்டு மே மாதம் முதல் எல்பிஜி கணக்கில் வழங்கும் சிலிண்டர்களை முற்றிலுமாக நீக்கியுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சந்தாதாரர்களாக இருக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள அனைவருக்கும் மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்களை அரசாங்கம் வழங்கிவருகிறது. ஆனால் மற்ற வாடிக்கையாளர்கள் இப்போது அரசாங்கத்திடமிருந்து எந்த மானிய உதவியும் பெறாமல் சிலிண்டருக்கு முழுத் தொகையைச் செலுத்திவருகின்றனர்.
பெட்ரோலிய மானியமாக 40 ஆயிரத்து 915 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது, இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 38 ஆயிரத்து 569 கோடி ரூபாயிலிருந்து 6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் எல்பிஜி மானியத்திற்கான ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் 37 ஆயிரத்து 256.21 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.