கிழக்கு லடாக்கின் பங்கோங் ஏரியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால், பதற்றம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தனது கருத்தை தெரிவத்துள்ளார்.
அதில், ஹிமாச்சல் மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். மத்திய அரசு எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது.
எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைத்து மாநில எல்லைகளும் உஷார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என அவர் கூறினார். இந்தியா - சீனாவின் எல்லைப் பகுதியின் 260 கி.மீ ஹிமாச்சல் மாநிலத்தை ஒட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன செயலிகள் தடை விவகாரம் - உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு சீனா கோரிக்கை!