ETV Bharat / bharat

விஜய் ரூபானி பதவிக்கு ஆபத்து? மன்சுக் மாண்டவியா விளக்கம் - மன்சுக் மாண்டவ்யா

அகமதாபாத்: குஜராத் மாநில முதலமைச்சர் பதவிலியிருந்து விஜய் ரூபானி விலகியதால் அவருக்கு பதிலாக தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

No change of leadership in Gujarat: Mansukh Madavia clarifies in a tweet

author img

By

Published : May 8, 2020, 8:36 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குஜாராத் மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 387 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்தனர். இதனால், அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,012ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425ஆகவும் அதிகரித்துள்ளது.

  • આજે માનવતા કોરોના સામે લડાઈ લડી રહી છે અને ગુજરાત પણ માન. મુખ્યમંત્રી શ્રી @vijayrupanibjp જીનાં નેતૃત્વ હેઠળ મક્કમતાપૂર્વક લડાઈ લડી રહ્યું છે, ત્યારે નેતૃત્વ પરિવર્તનની અફવાઓ ફેલવાવી એ ગુજરાતનાં હિતોને નુકશાન કરવાનું કૃત્ય છે. નાગરિકોને વિનંતી કે કોરોનાની સાથે અફવાથી પણ બચે.

    — Mansukh Mandaviya (@mansukhmandviya) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இத்தொற்றிலிருந்து இதுவரை 1,709 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் முதலமைச்சர் பதவியிலிருந்து விஜய் ரூபானி பதவி விலகியதாவும், அவருக்கு பதிலாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் செய்திகள் வலம்வந்தன.

இந்நிலையில், இதற்கு மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பதிவில், முதலமைச்சர் ரூபானியின் தலைமையின் கீழ் குஜராத் அரசு கரோனா வைரஸை எதிர்த்துப் போராடிவரும் இந்த நேரத்தில், மக்களின் நலனுக்கு எதிராக இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன என குஜராத்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும் மாநிலத்தில் முதலமைச்சரை மாற்ற எந்தவித திட்டமும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கும் ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.