பாட்னா : பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு நெருங்கியவரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்சிபி சிங் அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மூன்று ஆண்டுகள் தலைவர் பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்பதவியிலிருந்து தான் விலகுவதாக நிதிஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் கட்சியின் புதிய தலைவராக ஆர்சிபி சிங்கின் பெயரையும் அவர் பரிந்துரைத்தார். இந்நிலையில், இன்று (டிச.27) நடைபெற்ற அக்கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் நிதிஷ் குமாரின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனயைடுத்து அக்கட்சியின் புதிய தலைவராக ஆர்சிபி சிங் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!