சுயசார்பு கொள்கையை அமல்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கரோனாவால் மக்களிடையே எதிர்மறையான உணர்வு நிலவி வருகிறது. மக்களிடையே நேர்மறையான உணர்வை விதைக்க கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும். எனவே, இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுய சார்புக் கொள்கையை அமல்படுத்த நாடு தயாராகி வருகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா உருவாகும். இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார்கள், கட்டமைப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
சுதேசி ஜக்ரன் மஞ்ச் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நிதின் கட்கரி கலந்து கொண்டு இக்கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: ஜிப்புடன் கூடிய மாஸ்க்குகளை வழங்கும் கொல்கத்தா உணவகம்!