நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கான கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக மக்களிடம் வசூலிக்கும் கட்டணங்களை நிர்ணயிக்க நிதி ஆயோக்கின் கீழ் ஒரு குழுவை அமைத்திருந்தார்.
அந்த குழுவினர், தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தபட்ட படுக்கை செலவு, ஐ.சி.யு செலவு, வென்டிலேட்டர் இல்லாத பிபிஇ செலவுகள் என மொத்தம் 24 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாயும், 34 முதல் 43 ஆயிரம் ரூபாயும், 44 ஆயிரம் முதல் 54 ஆயிரம் ரூபாயும் என மூன்று வகையாக வசூலித்து வந்துள்ளனர். அனைத்து செலவுகளையும் ஒப்பிட்டு மூன்று செலவுகளாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாயும், 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாயும், 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாயாக குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, டெல்லியில் கட்டுபாடுள்ள பகுதிகளில் நேரடியாக சென்று கரோனா பரிசோதனையும் நடைபெற்றுவருகிறது.