நீர் மேலாண்மை, விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் பல பிரச்னைகளை குறித்து விவாதித்து முடிவுகளை எடுக்கும் திட்டக் குழு 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கலைக்கப்பட்டது. இதற்கு பிதிலாக மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நிதி ஆயோக் அமைப்பு அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பின் உறுப்பினர்களாக மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர். நாட்டின் முக்கிய பிரச்னைகளை குறித்து ஆலோசிக்க ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம், வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்த வேண்டும் என்று மூன்றாவது நிதி ஆயோக் கூட்டத்திலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகள் குறித்து நான்காவது நிதி ஆயோக் கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் ஐந்தாவது கூட்டத்தில் எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.