புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வேலை தளத்தை உருவாக்க கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் நிதி ஆயோக் இணைந்து ஒரு புதிய குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பல பேர் வேலை இழந்தனர்.
இதில் பெரிதும் பாதிக்கப்பட்டோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இந்த நிலைமையை சரி செய்யவும் அவர்களது வாழ்வாதாரத்தை சரி செய்யவும் வேலை வழங்க உள்ளது, நிதி ஆயோக்.
இதற்காக ஒரு தளத்தை உருவாக்க உள்ளதாகவும்; ப்ளூ காலர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மொழியிலும் இருப்பிடத்திலும் வேலை வாய்ப்புகளைக் கண்டறிய உதவும் ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் குறிக்கோள் என்றும்; அதற்காக குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது எனவும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா: உயிரை பணயம் வைத்து மனிதம் காக்கும் எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள்..!