பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படுகிறது. முறைகேடாக கடன் உத்தரவாத கடிதங்களை வங்கியில் பெற்று, அதைக்கொண்டு சுமார் ரூ.13,000 கோடி வரை நீரவ் மோடி கடன் பெற்றார்.
கடந்த ஜனவரி மாதம்தான் இந்த மோசடி வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்னரே நீரவ் மோடி இங்கிலாந்து தப்பிச் சென்றுவிட்டார். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்திவருகிறது.
கடந்த மாா்ச் மாதம் இங்கிலாந்து காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவர் லண்டன் வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நீரவ் மோடியை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மருந்துப் பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடும் அது ஏற்படுத்தும் விளைவுகளும்!