வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புனேவில் உள்ள தேசிய கடன் மீட்புத் தீர்ப்பாயத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கி சார்பில் கடனைச் செலுத்த உத்தரவிடக் கோரி வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, இரண்டு தவணைகளில் நிரவ் மோடி ரூ.7261.15 கோடியை வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவையடுத்து நிரவ் மோடியிடமிருந்து கடனை வசூலிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.