இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) வழிகாட்டுதலின் பேரில், நிம்ஸில் உள்ள மருத்துவ அலுவலர்கள் இந்த சோதனைக்கு 30-60 தகுதி வாய்ந்தவர்களை பதிவு செய்வதற்கான செயல்முறையைத் தொடங்கி இருப்பதாக அறிய முடிகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நிம்ஸ் இயக்குநர் மருத்துவர் கே. மனோகர் செய்தியாளர்களிடம் கூறியபோது,"ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) உடன் இணைந்து உருவாக்கி வரும் கோவாக்சின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள ஐ.சி.எம்.ஆர். தேர்ந்தெடுத்த மருத்துவமனைகளில் நிம்ஸ் மருந்துவமனையும் ஒன்றாகும்.
தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்படுவோரின் இரத்த மாதிரிகள் துணியில் சேகரிக்கப்படும். அவற்றின் மீது பொருத்தமான சோதனை செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்குப் பிறகு தடுப்பூசியின் முதல் டோஸ் அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.
தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்படுவோருக்கு மீண்டும் கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்களின் ரத்த மாதிரிகள் ஐ.சி.எம்.ஆரால் நியமிக்கப்பட்ட டெல்லி ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
சோதனை அறிக்கைகளைப் பெற்ற பிறகு, மருத்துவத் துறை அதைப் பகுப்பாய்வு செய்து மாதிரிகளின் உடலுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும்.
தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்படுவோருக்கு இரண்டு அளவு தடுப்பூசி வழங்கப்படும். மூன்று மைக்ரோகிராம் மற்றும் ஆறு மைக்ரோகிராம் அளவு கொண்ட இரண்டு தடுப்பூசிகள் போடப்படும். முதல் தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்படுவோருக்கு 14 நாள்களுக்குப் பிறகு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படும்.
தடுப்பூசி வழங்கிய இரண்டு நாள்களுக்கு, அவர்களை ஐ.சி.சி.யுவில் வைத்து மருத்துவர்கள் குழு கண்காணிக்கும். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு அனுப்பப்படுவர். தொடர்ந்து காணொலி அல்லது தொலைபேசி மூலமாக அவர்கள் கண்காணிக்கப்படுவர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்கப்படும்.
முதல்கட்ட மருத்துவ சோதனை 28 நாள்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு ஐ.சி.எம்.ஆர் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகம் (டி.ஜி.சி.ஐ) இரண்டாம் கட்ட சோதனைக்கு கூடுதல் நபர்களை அனுமதிப்படும் தொடர்பில் முடிவெடுக்கும்.
நாடு முழுவதும் முதல் கட்ட பரிசோதனைக்கு ஏறத்தாழ 375 நபர்களும், இரண்டாம் கட்டம் 875 நபர்களும் அனுமதிக்கப்படலாம்.
இதற்கிடையில், விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் (கேஜிஹெச்) நெறிமுறைக் குழுவென்று கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தி மருத்துவ பரிசோதனைகளுக்கான தயாரிப்புகளை இறுதி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐ.சி.எம்.ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி இரண்டும் இணைந்து இந்த தடுப்பூசி உருவாக்கத்தில் பங்காற்ற உள்ளன. கடந்த ஜூன் 29 அன்று ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.வி உடன் இணைந்து கோவிட் -19 க்கான இந்தியாவின் முதல் தடுப்பூசியான கோவாக்சினை பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
கோவிட்-19க்கான தடுப்பூசியை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டுமென அறிவிக்கப்படாத அவசர நிலை நீடிப்பதால், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகம், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ), சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க அனுமதி அளித்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.