ETV Bharat / bharat

அதிகரிக்கும் கரோனா தொற்று - அகமதாபாத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

author img

By

Published : Dec 7, 2020, 5:45 PM IST

காந்திநகர்: அகமதாபாத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதால் மறு உத்தரவு வரும்வரை நள்ளிரவு ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Night curfew extended in Ahmedabad
Night curfew extended in Ahmedabad

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கரோனா பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்துவருகிறது. இருப்பினும், இதற்கு நேர்மாறாக டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அகமதாபாத் நகரில் 306 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நகரில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,030ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அகமதாபாத் உள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே அமலில் இருக்கும் நள்ளிரவு ஊரடங்கு மறு உத்தரவு வரும்வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதிவரை இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை அகமதாபாத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: விவசாய அமைப்புகளுக்கு ஆதரவாக களமிறங்கும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.