கடந்த 2019 பிப்ரவரி 14ஆம் தேதியன்று, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை அடுத்துள்ள அவந்திபோரா பகுதியில், ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ஆயுதக் காவல் படையினர் வாகனங்களில் கொண்டிருந்தபோது அவர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு தற்கொலைத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை விசாரணை செய்ய தேசிய புலனாய்வு முகமை 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை, தாக்குதலில் தொடர்புடைய தந்தை, மகள் என இருவரை கைது செய்தது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த வாயிஸ் உல் இஸ்லாம், ஹக்ரிபோரா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அப்பாஸ் ராதர் ஆகியோரை என்ஐஏ கைது செய்தது.
வாயிஸ் உல் இஸ்லாமிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு செய்வதற்காக பயன்படுத்தும் ரசாயனங்களை வாங்க உதவியதாக தெரிவித்தார். மேலும், பயங்கரவாதி முகமது உமருக்கு வீடு கொடுதது தங்க உதவியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க தூதரகத்தில் மனித வெடிகுண்டு