பெங்களூருவின் சிக்கபானவர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கைத் துப்பாக்கி, தோட்டாக்கள், வெடி மருந்து, IED வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் சர்க்யூட்டுகள் போன்றவற்றை பெங்களூரு காவல் துறையினர் கடந்த மாதம் 8ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) மேற்கு வங்கம் மாநிலம் முஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மொசாஃப் ஹுசைன் என்பவரை நேற்று கைது செய்தது.
விசாரணையின் போது, அவர் ஜமாத் உல் முஜாஹிதின் பங்களாதேஷ் ( Jamaat-Ul-Mujahideen Bangladesh) அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் அசிஃப் இக்பால் என்பவருடன் வந்த ஹுசைன், மேலும் சில பயங்கரவாதிகளுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடித்து அதில் வந்த பணத்தை வைத்து இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுவந்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஹுசைன், கொல்கத்தா தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அவரை பெங்களூரு தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாராண்ட் பெறப்படும் என NIA அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கைலாசா அமைந்தே தீரும், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்' - அக்னி பிழம்பாய் வெடித்த நித்யானந்தா