1) முதல் பயணம்
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜகபக்ச வெற்றிப் பெற்று, அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 நாட்கள் கூட கடக்காத நிலையில் அவர் இந்தியா வந்துள்ளார். கடல் கடந்து அவர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இது. இது இந்தியா- இலங்கை உறவை பறைசாற்றுகிறது. இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக் கொண்ட போது பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து விவாதித்தனர். முன்னதாக கோத்தபய பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
2) நிதி உதவி
இலங்கையின் அடிப்படை கட்டுமானத்துக்காக இந்தியா தரப்பில் 400 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கப்பட உள்ளது. இது சமூக மேம்பாடு மற்றும் கல்வி மானிய திட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். முன்னாள் அதிபர் சிறிசேனவுக்கு பொருளாதார சவால்கள் உள்நாட்டில் ஒரு முக்கியமாக திகழ்ந்தது. மேலும் ஹம்பாந்தோட்டா பகுதியில் சீனாவும் வலுவாக காலூன்றியது.
தற்போது இந்தியா இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்புடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் ‘பரஸ்பர ஆர்வத்தை’ அடையாளம் காண்பது மற்றும் மக்கள் இடையே கலாச்சார உறவை புதுப்பிப்பது குறித்தும் முன்னுரிமைப்படுத்துவதாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக இந்தியா இதுவரை 46ஆயிரம் வீடுகளை கட்டியுள்ளதுடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களுக்கான 14ஆயிரம் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
3) பயங்கரவாத ஒழிக்க நிதி
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதபயா 25 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர். இதுதவிரவும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களை சமாளிக்கும் விதமாக இந்தியா தரப்பில் 50 மில்லியன் டாலர் கூடுதலாக நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.
இந்தாண்டு ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கொழும்புக்கு சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி ஆவார். தாக்குதல்களுக்குப் பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசா முழுவதும் சோதனைகளை நடத்தியதுடன், இலங்கை குண்டுவெடிப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை கைதும் செய்தது. மேலும் இதுதொடர்பான விசாரணையை துரிதப்படுத்தியது.
4) நெருக்கமான தொடர்பு
பிரதமர் மோடி- கோத்தபய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை எந்தவொரு கூட்டு அறிக்கையும் வெளியிடவில்லை. ஏனெனில் இந்த நேரத்தில் எந்தவொரு பிரதிநிதியும் இல்லை. ஆனால் கோத்தபயவின் வெளிநாட்டு வருகை சீனாவிற்கு ஒரு அடிக்கோடிட்டுக் கொண்டிருக்கும் செய்தியைக் கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனைமத்தை உருவாக்க இந்தியா - ஜப்பானுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இத்திட்டத்தால் இலங்கை போக்குவரத்திலிருந்து பெருமளவு பயனடைகிறது. பிராந்தியத்தில் சீன இருப்பு ஒரு யதார்த்தம் என்றாலும், பெய்ஜிங்கை நோக்கி கொழும்பு மேலும் சரியாமல் இருப்பதை உறுதி செய்ய இலங்கையுடன் தென் மாநிலங்களின் நெருக்கமான தொடர்பு அதிகரிப்பதும் அவசியம்.
5) இன நல்லிணக்கம்
இலங்கை அரசியலில் சிறுபான்மை தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது என முறையான பேச்சுவார்த்தைகளிலும் அந்நாட்டின் ஆட்சியாளர்களிடத்தில் காணப்படுகிறது.
இலங்கை தமிழர் விவகாரம் தமிழ்நாட்டு அரசியலிலும் பிரதிப்பலிக்கிறது. தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் நடந்தபோது ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியில் இருந்தனர். இந்த நிலையை கடந்த அரசாங்கம் மாற்ற முயற்சித்தது. நல்லிணக்க முயற்சிகள் அதிகரித்தன. எனினும் போர்க்குற்ற விசாரணை நடக்கவில்லை.
தமிழர்-மீனவ பிரச்னை
தமிழ் சமூகத்தின் எண்ணங்கள் பெரும்பான்மை சிங்கள அரசாங்கம் நிறைவேற்றும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். “நாங்கள் இலங்கையில் நல்லிணக்கம் குறித்த கருத்துக்களை பகிரங்கமாக பரிமாறிக்கொண்டோம். அதிபர் ராஜபக்ச, இன நல்லிணக்கம் குறித்த தனது அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார்.
-
Joint press meet with President @GotabayaR. Watch. https://t.co/eI65NrakDM
— Narendra Modi (@narendramodi) November 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Joint press meet with President @GotabayaR. Watch. https://t.co/eI65NrakDM
— Narendra Modi (@narendramodi) November 29, 2019Joint press meet with President @GotabayaR. Watch. https://t.co/eI65NrakDM
— Narendra Modi (@narendramodi) November 29, 2019
சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றிற்கான தமிழர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக, நல்லிணக்க செயல்முறையை இலங்கை அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.மேலும், மீனவர்களின் நிலை மற்றும் வாழ்வாதார பிரச்னைகள் குறித்த மனிதாபிமான கவலைகள் பற்றியும் விரிவாக விவாதித்தனர். இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்றும் ராஜபக்ச உறுதியளித்தார்.
இதையும் படிங்க: புதிய இலங்கை அதிபரை வரவேற்ற குடியரசுத் தலைவர், பிரதமர்!