கரோனா ஊரடங்கு காரணமாகப் பயணிகள் ரயில் சேவை முடக்கப்பட்டுள்ள சூழலில், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்களில் பணிபுரிய வரும் பயணச்சீட்டு பரிசோதகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே துறை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், "பயணச்சீட்டு பரிசோதகர்கள் கோட் மற்றும் டை அணிய வேண்டாம். சட்டையில் பெயர், பதவி அடங்கிய பேட்ஜை அணிந்திருக்க வேண்டும்.
இவர்களுக்குத் தேவையான அளவு முக்கவசம், கையுறை, கவச உடை, சானிடைசர், சோப் ஆகியவை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். மேலும், பரிசோதகர்கள் பயணச்சீட்டுக்களைக் கைப்படாமல் பரிசோதிக்க அவர்களுக்குப் பூதக்கண்ணாடி வழங்க வேண்டும்.
தெர்மல் டெஸ்டிங் எடுக்காமல் எந்த பரிசோதகரையும் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. அனைத்து பணியாளர்களும் சமுக இடைவெளி வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பணியிடங்களைச் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வெளியில் விநியோகிக்கப்படும் உணவுகளைப் பரிசோதகர்கள் உண்ண வேண்டாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்துகள் ஆய்வு...!