புதுச்சேரி மாநிலத்தின் காவல் துறை இயக்குநராக பதவி வகித்துவந்த சிவகாமிசுந்தரி நந்தா கடந்த வாரம் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியின் புதிய காவல் துறை இயக்குநராக பாலாஜி ஸ்ரீவஸ்தவா இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் காவல் துறை தலைமையகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட அவர், காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல் துறை தலைமை அலுவலகத்தில் உள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட பாலாஜி ஸ்ரீவஸ்தவாவுக்கு காவல் துறை உயர் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.