ETV Bharat / bharat

டெல்லியில் ஆடம்பர கார்களை திருடி விற்பனை செய்த கும்பல் கைது!

author img

By

Published : Sep 11, 2020, 7:21 PM IST

டெல்லி, உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட பகுதிகளில் ஆடம்பர கார்களை திருடிவந்த நான்கு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

new-delhi-gang-who-stole-luxury-cars-on-demand-busted-4-held

டெல்லி, உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட பகுதிகளில் ஆடம்பர கார்கள் திருடு போவதாக காவல் துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளன.

இது குறித்து விசாரணை மேற்கொள்கையில், நான்கு பேர் கொண்டு கும்பலை காவலர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆறு எஸ்யூவி கார்கள், டிஜிட்டல் பூட்டுகளை உடைக்கும் கருவிகள், கள்ளச்சாவிகள், கார் லாக்கள் என ஏராளமான ஆடம்பர கார் தொடர்பான சாதனங்கள் கைப்பற்றிப்பட்டது.

முகமது சாஜித், சோனு, ஆகாஸ், முன்னா கான் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் மீதும் குற்றப்பின்னணி உள்ளது. அதிலும் சாஜித் என்பவர் மீது 15 வழக்குகள் பிகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் டெல்லி சத்தார்பூர் பகுதியில் செப்.2ஆம் தேதி ஆடம்பர காரினை திருடிய போது, காவல் துறையினருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. இந்தத் தகவல்களைக் கொண்டு ஆறு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் விசாரணை நடந்துள்ளது.

ஆடம்பர கார்களை திருடி விற்பனை செய்தவர்கள் கைது

அந்த விசாரணையின் போது சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆட்டோவில் வந்த மூன்று பேர் சில நிமிடங்களில் காரினை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த ஆட்டோ மீதான விவரங்கள் தெரியவர, ஆட்டோ ஓட்டுநரை காவலர்கள் கைது செய்துள்ளனர். அந்த ஆட்டோ ஓட்டுநரிடன் நடத்திய விசாரணையில் ஆடம்பர கார்களை திருடுவது சாஜித் மற்றும் சோனி என்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிகாரில் உள்ள பிண்டூ என்பவர் தான் தலைவன் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஆடம்பர கார்களை கடத்தி பிண்டூ என்பவரின் ஓட்டுநர் பிகாருக்கு கொண்டு செல்வார். அங்கு திருடப்பட்ட வாகனங்களின் அடையாள எண்களை மாற்றி பொய்யான ஆவணங்களுடன் விற்று வருகின்றனர். அப்படி விற்பனையாகும் பணத்திலிருந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் கொடுத்துள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: காதல் மனைவி மூன்றாம் நாள் பிரிவு: காதல் கணவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.