புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவராக பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் டெல்லி சென்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தனர். இதற்கிடையே, இன்று காங்கிரஸ் கட்சி தலைமை செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஏ.வி. சுப்பிரமணியன் துணை சபாநாயகராகப் பதவி வகித்தவர். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் ஒருமுறை பதவி வகித்தார். தற்போது, மீண்டும் புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பாஜக ஒரு அரசியல் வேட்டைக்காரன்' - ஆதீர் ரஞ்சன் சௌத்ரி