ETV Bharat / bharat

'சந்தைக்கு வந்த புதிய 50-50 பிஸ்கட்' - பாஜக, சிவசேனா குறித்து ஓவைசி கருத்து!

author img

By

Published : Nov 4, 2019, 9:07 AM IST

ஹைதராபாத்: புதிய வகையான 50-50 பிஸ்கட் சந்தைக்கு வந்துள்ளதாக பாஜக-சிவசேனா விவகாரம் குறித்து அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

Owaisi

ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அசாதுதீன் ஓவைசி இதுதொடர்பாக கூறியதாவது:

மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது? அங்கு அடுத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸா அல்லது வேறு யாராவது வருவார்களா? என்பது குறித்தும் எனக்குத் தெரியாது. அங்கு நடப்பது இசை நாற்காலிப் போட்டி.

இவ்வாறான சூழ்நிலையில் அங்குள்ள சந்தைகளில் புதிய வகையான 50-50 பிஸ்கட் ஒன்றும் அறிமுகமாகியுள்ளது. இது என்ன என்று அனைவரும் கேட்கின்றனர். நீங்களும் கேட்கின்றீர்கள். ஆனால் ஒன்றை மட்டும் நான் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.

மகாராஷ்டிராவில் பாஜக அல்லது சிவசேனா ஆட்சி அமைக்க நான் ஆதரவு அளிக்க மாட்டேன். சிவசேனாவுக்கு தற்போது என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. அக்கட்சித் தலைவர் (உத்தவ் தாக்கரே) பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து பயப்படுகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரண்டரை ஆண்டு இழுபறி

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கட்சிகள் இடையே ஆட்சியமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் அங்கு இழுபறி நீடிக்கிறது. ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவுக்கு பாஜக விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே இழுபறிக்கு காரணம்.

இதையும் படிங்க: 'தோல்வியடைந்தால்தான் காங்கிரசுக்கு இஸ்லாமியர்களின் நினைவு வருகிறதோ...!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.