இந்துக் கடவுளான லட்சுமி படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என பாஜக மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இக்கருத்திலிருந்து சுப்பிரமணியன் சுவாமி பின்வாங்கியுள்ளார்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்தோனேசியா ரூபியாவின் மதிப்பு சரிவை நோக்கிச் சென்றபோது, நோட்டுகளில் இந்துக் கடவுளான விநாயகர் படத்தை அச்சிலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரையை அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் ஏற்றார். ரூபியாவின் மதிப்பு உயர இந்நடவடிக்கை உதவியது என ஒரு கூட்டத்தில் பேசினேன். இதைக் கேட்டு அரங்கில் இருந்தவர்கள் சிரித்தனர்.
பின்னர், இந்தியாவில் இதேபோல் நடைபெற்றால் யாருடைய படத்தை அச்சிடலாம் என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். லட்சுமியின் படத்தை அச்சிடலாம் என பதில் மட்டும் அளித்தேன். கடவுளின் படத்தை அச்சிட்டால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என நான் கூறவில்லை. திட்டங்களால் மட்டுமே அது உயரும். ஆம், இந்துக் கடவுளான லட்சுமியின் அருளால் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு உயர வாய்ப்பு இருந்தாலும், அதனை நான் பரிந்துரைக்க மாட்டேன். என்னுடைய கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-30 செயற்கைக்கோள்