ETV Bharat / bharat

நேபாள பிரதமர் பதவியில் நீடிப்பாரா? மாட்டாரா? - முடிவு ஜூலை 8இல் - கம்யூனிஸ்ட் கட்சி

காத்மாண்டு: பிரதமர் கே.பி ஷர்மா ஒலியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான நிலைக்குழுக் கூட்டம் வரும் புதன்கிழமைக்கு (ஜூலை 8) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

PM Oli
PM Oli
author img

By

Published : Jul 6, 2020, 4:01 PM IST

நேபாளம் நாட்டின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, சமீபத்தில் இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் திருத்தப்பட்ட புதிய வரைப்படத்தை வெளியிட்டார். மேலும், இந்தியாவை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளையும் கூறியிருந்தார்.

தொடர்ந்து மாநாடு ஒன்றில் பேசிய அவர், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைப்படத்தை வெளியிட்ட காரணத்தினால் இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டினார். இவரின்‌ பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த பல மூத்தத் தலைவர்கள், இந்தியா குறித்து அவதூறு கருத்து பேசிய குற்றத்திற்காக உடனடியாக ஒலி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் அங்கு ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டு, சொந்தக் கட்சிக்குள் பிரதமர் ஒலிக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. கடந்த வாரம் அக்கட்சி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற 44 நிலைக்குழு உறுப்பினர்களில் 31 பேர் ஒலிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்தத் தலைவர்களான மாதவ் நேபாள், ஜல்நாத் கானல், பாம்தேவ் கௌதம், புஷ்பா கமல் தஹால் ஆகியோர் ஒலி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் அல்லது இந்தியா மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனிடையே, ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், ஜுலை 1ஆம் தேதி அவர் வீடு திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியானது. தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைச் சரிசெய்யும் நோக்கில், கட்சியின் மூத்தத் தலைவரான பிரசந்தாவை அவ்வப்போது ஒலி சந்தித்து வருகிறார். நேற்று நடைபெற்ற சந்திப்பில் முழுமையான முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் பிரசாந்தாவைச் சந்திக்க ஒலி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான நிலைக்குழுக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், அக்கூட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஆலோககர் சூர்யா தாபா தெரிவித்துள்ளார். ஒத்திவைப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்து மூத்தத் தலைவர்கள் புரிந்துகொள்ள அதிக நேரம் தேவைப்படுவதால், சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொடர் சர்ச்சைகள்; சொந்தக் கட்சிக்குள் எதிர்ப்பு - ராஜிநாமா செய்கிறாரா நேபாள பிரதமர்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.