ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் பணிபுரிந்த செவிலியர் இருவர் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, அந்த இரு செவிலியரையும் மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான செவிலியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இடைநீக்க உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்றும், தங்களுக்கு நீதி வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து முழக்கம் எழுப்பினர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலி ஒருவர் கூறுகையில், ”கரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து, உயிரைப் பணயம் வைத்து செவிலியர் வேலை செய்துவருகிறோம். ஆனால், இரு செவிலியர் பணியில் அலட்சியம் என்று கூறி இடைநீக்கம் செய்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க....ஒரு கிலோ மீட்டர் நடந்து மருத்துவமனைக்குச் சென்ற கரோனா நோயாளி!