கரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுகின்றனர்.
கடந்த மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்டமாக இந்தத் திட்டம் செயல்பட்டுவருகிறது.
இது தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதில், “ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 746 விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 60 கூடுதல் விமானங்களை இயக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் இந்தச் சேவையை மேற்கொள்ளும். தற்போதைய நிலவரப்படி, 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாற்றவுள்ள பிரதமர் மோடி!