ETV Bharat / bharat

'உத்தவ் தாக்கரேவை சமாதானப்படுத்த முயற்சிப்போம்' - சரத் பவார் நம்பிக்கை - 'உத்தவ் தாக்கரேவை சமாதானப்படுத்த முயற்சிப்போம்': சரத் பவார் நம்பிக்கை

மும்பை: குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சமாதானப்படுத்த முயற்சிப்போம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

NCP firm in opposing CAA, will try to convince Uddhav Thackeray: Sharad Pawar  Sharad Pawar, Uddhav Thackeray, NCP, CAA  'உத்தவ் தாக்கரேவை சமாதானப்படுத்த முயற்சிப்போம்': சரத் பவார் நம்பிக்கை  உத்தவ் தாக்கரே, சரத் பவார், மகாராஷ்டிரா, குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை பதிவேடு
NCP firm in opposing CAA, will try to convince Uddhav Thackeray: Sharad Pawar
author img

By

Published : Feb 18, 2020, 9:04 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்தார். இந்நிலையில் உத்தவ் தாக்கரேவை சமாதானம் செய்ய முயற்சிக்கப்படும் என சரத் பவார் கூறியுள்ளார்.

இது குறித்து சரத் பவார் அளித்த பேட்டியில், “கூட்டணி கட்சிகளை கையாள்வது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 29 கட்சிகள் அங்கம் வகித்தன. இடதுசாரிகளின் கொள்கை வேறுபட்டாலும் நாங்கள் அவர்களையும் அரவணைத்து சென்றோம்.

தற்போது மகாராஷ்டிராவில் மூன்று கட்சிகளின் கூட்டணி நடக்கிறது. ஆகவே, இவ்விவகாரத்தை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி உத்தவ் தாக்கரேவை சமாதானப்படுத்த முயற்சிப்போம். உத்தவ் தாக்கரே அவரது பார்வையில் இதனை சொல்லியிருக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இதனை நாங்கள் தெளிவுப்படுத்தியுள்ளோம்” என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக விளக்கமளித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, “மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பிரச்னையில்லை. ஆகவே அதனை அமல்படுத்துவோம்” என்றார்.

இதையும் படிங்க:
ஈடிவி பாரத் ஊடகத்திற்கு விருது
!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.