சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியைச் சேர்ந்த நக்சலைட்டுகள், மினப்பா காட்டில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சண்டைக் காட்சிகளை காணொலியாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மாநில காவல் துறை, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Naxalites release video footage of security personnel encounter in Minappa forest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7342422_img-1.jpg)
இந்த காணொலியில், ஐம்பதிற்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் இடம்பெற்றுள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, வெடிகுண்டுகளின் சத்தம் பரவலாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சமயத்தில் தான் பாதுகாப்புப் படையினர் தரையில் படுத்திருக்கும் காட்சிகளும் காணொலியில் இடம்பெற்றுள்ளன.
நக்சலைட்டுகள் AK-47 ரக துப்பாக்கிகள், மரைகுழல் துப்பாக்கிகள், சுய-ஏற்ற மரைகுழல் துப்பாக்கிகள், பீப்பாய் கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வலம்வரும் காட்சிகளும் இந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்