சவுதிரி சர்க்கரை ஆலை மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. நவாஸ் குடும்பத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை 30 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், லோக்பத் சிறைச்சாலைக்கு தன் தந்தை நவாஸ் ஷெரீப்பை காணச் சென்றபோது, மரியம் நவாஸ் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகவும், ராணுவத்திற்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்த நிலையில், மரியம் நவாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் நோக்கத்திற்காக மரியம் நவாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.