கேரள மாநிலத்தில் கொச்சியில் ராஜிவ் ஜா, சுனில்குமார் என்ற இரண்டு கடற்படை அலுவலர்கள் பயிற்சி எடுப்பதற்காக ஐ.என்.எஸ் கருடா போர் கப்பலிலிருந்து வழக்கம் போல் கிளைடர் விமானத்தில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் இன்று (அக் 4) காலை 7 மணியளவில் தொப்பும்படி பாலத்தின் அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் அவர்கள் இருவரையும் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எச்.எஸ் சஞ்சிவனி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் கேரள காவல் துறையினரும் விசாரனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: புவிவெப்பமயமாதலால் நிகழும் வெப்பநிலை அதிகரிப்பும்... காட்டுத்தீயும்...