இந்தியாவுக்கு சொந்தமான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்கப்பல், கர்நாடகாவில் உள்ள கர்வார் துறைமுகத்துக்கு வந்தடைந்த போது தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது, அந்த போர்க்கப்பலில் பயணித்த துணை கமாண்டர் டி.எஸ்.சவுகான், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தீயில் இருந்து வெளியேறிய புகை, உமிழ்வுகளால் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.
சிறது நேரத்திற்கு பிறகு, போர்க்கப்பல் குழுவினரால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து, சுயநினைவை இழந்த துணை கமாண்டர் கர்வார், கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.
துணை காமன்டர் டி.எஸ் சவுகனின் கடின முயற்சியால், ஐ.என்.எஸ் விக்ரமாதித்தயா போர்க்கப்பலில் ஏற்பட இருந்த பெரும் சேதம் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. இந்த போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
60 மீட்டர் உயரமும், 284 மீட்டர் நீளமும் கொண்ட ஐ.என்.எஸ் விக்ரமாதித்தயா போர்க்கப்பலின் எடை 40 ஆயிரம் டன் ஆகும். இதுதான் இந்திய கப்பற்படையில் இருக்கும் மற்ற போர்க்கப்பல்களை விட மிகவும் பெரிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.