ETV Bharat / bharat

தேசிய வலிப்பு நோய் தடுப்பு நாள் : ஆரம்பகால நோயறிதல் பாதிப்பைக் குறைக்கும்!

author img

By

Published : Nov 17, 2020, 5:15 PM IST

மூளையில் திடீரென மின் உற்பத்தி அதிகமாகும்போது ஏற்படும் வலிப்பு நோய் தொடர்பான பல முக்கியத் தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

pile
pile

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, உலக அளவில் சுமார் 50 மில்லியன் மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது உலக அளவில் மிகவும் பொதுவான நரம்பியல் நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கால்-கை வலிப்பு என்றால் என்ன?

வலிப்பு நோய் மூளையின் ஒரு நீண்டகால நோயாக இருந்து வருகிறது. மூளையில் மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. வலிப்பு நோயில் பல வகைகள் உண்டு. அதற்குப் பல காரணங்கள் உண்டு. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை இந்த நோயினால் எவரும் பாதிக்கப்படுவார்கள். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு, மரபணு ரீதியான நோய்கள், மூளையில் ஏற்படும் ’மெனின்ஜைட்டீஸ்’ எனப்படும் தொற்று காரணமாகவும் வலிப்பு நோய் உண்டாகிறது.

கால்-கை வலிப்புக்கு என்ன காரணம்?

  • கால்-கை வலிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு காரணங்கள் இருக்கலாம், சில சமயங்களில் காரணம் அறியப்படாமல் இருக்கலாம்
  • சாலை விபத்துகளால் ஏற்படும் மூளை பாதிப்பு
  • மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட குறைபாடு
  • புகைப்பிடித்தல், மது அருந்துதல்
  • மூளைக்காய்ச்சல், என்செபாலிடிஸ் அல்லது நியூரோசிஸ்டெர்கோசிஸ் போன்ற தொற்று பாதிப்பு
  • மூளையில் கட்டி
  • மரபணு பிரச்னைகள்

நோய் அறிகுறிகள்:

  • உணர்வு இழப்பு
  • கைகள் அல்லது கால்களில் கூச்ச உணர்வு
  • கைகள், கால்கள் அல்லது முகத்தின் தசைகளில் விறைப்பு

வலிப்பு தாக்கங்களைக் கையாள்வதற்கான சிறப்புக் குறிப்புகள்:

வலிப்பு ஏற்படும்போது கையில் கத்தி, சாவி, இதர இரும்புப் பொருள்களைக் கொடுப்பதினால் அது குறையாது.

கழுத்தை இறுக்கும் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

மேலாடைகளைத் தளர்த்திவிட்டு அவரை ஒருபுறமாக திருப்பி படுக்கவைக்க வேண்டும். அப்போதுதான் வாயில் உள்ள திரவங்கள் வெளியேறும்.

தலையின் கீழ் மென்மையான பொருள் ஒன்றை வைக்க வேண்டும்.

நாக்கை விழுங்குவாரோ என்ற பயத்தில் நபரின் வாயில் எதையும் வைக்க வேண்டாம்.

மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நப்ருக்கு ஒய்வும் தூக்கமும் நிச்சயம் தேவை.

வலிப்பு நோய் ஒரு மனநோய் அல்ல. முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் இதை முழுமையாக குணப்படுத்தி, இயல்பு வாழ்க்கையை இந்நோய் உள்ளவர்கள் மீண்டும் தொடரலாம்.

ஆரம்பத்திலே நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சையை மேற்கொள்வதால் பிரச்னை மோசமடையாமல் தவிர்க்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.