புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளி சார்பில் பேராசிரியர் ராஜு, முனைவர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ”புதுடில்லியின் தேசிய நாடகப் பள்ளி ஏற்பாடு செய்திருக்கும் 21ஆவது நாடகத் திருவிழா, புதுச்சேரியில் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை, 7 நாள்கள் நடக்கிறது. இந்த நாடக விழா புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறுகிறது. புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர் அஸ்வின்குமார், நாடக மற்றும் திரைப்பட நடிகர் நாசர் முன்னிலையில் இந்த நாடகத் திருவிழா தொடங்க உள்ளது.
இவ்விழாவில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நாடகக் குழுக்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாடகங்கள் இடம்பெறுகின்றன. இரண்டு மலையாள நாடகங்கள், தமிழ், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் தலா ஒரு நாடகம், வங்கதேசம் மற்றும் செக் குடியரசு நாட்டின் நாடகங்களும் அரங்கேறும். உலகத்தரம் வாய்ந்த நாடகங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. நுழைவுக் கட்டணம் இல்லை, எனவே அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்“ எனக் கூறினர்.
இதையும் படிங்க: 90's கிட்ஸ்களின் விளையாட்டை விளையாடும் இன்றைய குழந்தைகள்!