ETV Bharat / bharat

புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!

author img

By

Published : May 16, 2019, 2:57 PM IST

Updated : May 16, 2019, 6:59 PM IST

புதுச்சேரி: சுகாதாரத்துறை சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை, சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் பரிந்துரையின் படி இந்தியாவில் தேசிய டெங்கு தினம் மே 16ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை அம்மாநில சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.

சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார்

முன்னதாக, காந்தி சிலை அருகே டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியில் இடம்பெற்ற அரங்கை சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் தொடக்கி வைத்தார். இந்த அரங்குகளில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது குறித்தும், வீட்டின் அருகே பழைய டயர்கள் மற்றும் தேங்காய் மட்டைகளை உபயோகிக்க வேண்டாம் என்பது குறித்தும், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும் அரங்கில் விழிப்புணர்வு பதாதைகள் இடம்பெற்றன. டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Intro:தேசிய டெங்கு தினம் புதுச்சேரியில் சுகாதாரத்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை அருகே பேரணி நடைபெற்றது

Body:இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் பரிந்துரையின் படி இந்தியாவில் தேசிய டெங்கு தினம் மே 16-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது நோய் பரவாமல் தொடங்கும் முன்பு மக்களுக்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது டெங்கு தடுக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவது , நோயை கட்டுப்படுத்த மக்களை தயார் படுத்துவது போன்றவை இந்த நாளில் நோக்கமாகும்

அந்த வகையில் இன்று புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் தேசிய டெங்கு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை அம்மாநில சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி டெங்கை கட்டுப்படுத்தவும் என முழக்கமிட்டனர் பேரணி நகரின் முக்கிய வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றது

முன்னதாக சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி இடம்பெற்ற அரங்கை துவக்கி வைத்தார்

இந்த அரங்குகளில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது குறித்து வீட்டின் அருகே பழைய டயர்கள் மற்றும் தேங்காய் மட்டைகளை உபயோகிக்க வேண்டாம் என்பது குறித்தம் விழிப்புணர்வும் டெங்கு பரவுவதை எவ்வாறு தடுக்கலாம் மற்றும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் அரங்கில் விழிப்புணர்வு பதாதைகள் இடம்பெற்றன இதனை ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியினை பார்வையிட்டனர்

Conclusion:தேசிய டெங்கு தினம் புதுச்சேரியில் சுகாதாரத்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை அருகே பேரணி நடைபெற்றது
Last Updated : May 16, 2019, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.