நாட்டில் சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த ஊரடங்கில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உணவகங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவை கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், கர்நாடகாவில் உள்ள ராஜிவ் காந்தி வனப்பூங்காவும் மக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பூங்காவில் விலங்குகளைப் பார்வையிட அழைத்துச் செல்லும் வாகனப் பயணமும் அனுமதிக்கப்படுகிறது. வாகனங்களில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் வகையில், மக்கள் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பூங்காவில் உள்ள ககனகோட் வனவிலங்கு வாகன மையத்திலிருந்து புறப்பட்ட வாகனத்திலிருந்த சுற்றுலாப் பயணிகள் தேசிய விலங்கான புலி ஒன்று, தேசியப் பறவை மயிலை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அபூர்வ காட்சியைப் பார்த்து உறைந்துள்னர்.
இதை ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, தற்போது அப்படம் வைரலாகியுள்ளது.