இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் துணைப் பிரதமராக இருந்தவர் எல்.கே. அத்வானி. இவர் பாஜக கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இந்நிலையில் இவர் இன்று தனது 92ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.
இந்தத் தருணத்தில் அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தலைவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.