புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று (ஆகஸ்ட் 20) கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு முருகா திரையரங்கு சமிக்ஞை (சிக்னல்) அருகில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏவி. சுப்பிரமணியம், முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு ராஜிவ் காந்தி திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். பிறகு கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க... படுக்கைகள் வழங்கத் தவறினால் கடும் நடவடிக்கை: மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை