புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், ”மாநிலத்தில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துவருகிறது. வைரஸ் (தீநுண்மி) தொற்று நிமோனியாவாக மாறி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பும் அதிகளவில் ஏற்படுகிறது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு இருந்தால் அனைவரும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஜேஇஇ, நீட் தேர்வை தள்ளிவைக்க 7 மாநில அரசுகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும், தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளதால், மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே, நீட் தேர்வை ரத்துசெய்ய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
அமைச்சர் கந்தசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இடைநிலை, கீழ்நிலை அலுவலர்களுடன் பேசக்கூடாது என்றும், தலைமைச் செயலரிடம் மட்டுமே பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கோ, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கோ உத்தரவிடும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு கிடையாது. முதலமைச்சர், அமைச்சரவை கூறும் அறிவுரைப்படிதான் அவர் செயல்பட வேண்டும்“ என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'மத்திய அரசு அலுவலர்கள் மீது இந்தித் திணிப்பு!'