அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்று கூறப்படும் என்.ஆர்.சி.யில் மூன்று கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 661 பேர் விண்ணபித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மூன்று கோடியே 11 லட்சத்து 22 ஆயிரத்து 4 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததன. அதையடுத்து 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் பெயர்கள் இடம் பெறாதது இந்தியா முழுவதம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் என்.ஆர்.சி. பெயர் பட்டியலில் சேர்க்கபட்ட பெயர்களை அஸ்ஸாம் மக்கள் nrcassam.nic.in. என்ற இணையதளத்தில் காணலாம் என்றும் அதில் தனி நபருடன், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களையும் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுப்பட்ட பெயர்களின் நபர்கள், அம்மாநிலத்தில் அமைக்கபட்டிருக்கும் சுமார் 400 வெளிநாட்டு மக்கள் பதிவேடு தீர்ப்பாயங்களில் மீண்டும் முயற்சி செய்யலாம் என்றும், அவர்களுக்கு மேலும் 120 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.