ஆந்திர மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்கும் மசோதாக்களை கடந்த திங்கள்கிழமை அம்மாநில சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடைபெற்று, பின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், சட்ட மேலவை இம்மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவைத் தலைவர் எம்.ஏ. ஷாரிஃப் தேர்வுக்குழுவுக்கு அனுப்பினார். இதனால் அதிருப்தியடைந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சட்ட மேலவையைக் கலைப்பதற்கு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், மேலவைத் தலைவருக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமராவதி போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது போலி கேஸ் போட்ட போலீஸ்!
இந்நிலையில், நேற்று ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்சாபூஷன் ஹரிச்சந்திரனை எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்து மனு அளித்துள்ளார். அம்மனுவில், சட்ட மேலவையைக் கலைக்கும் நோக்கிலும், அவைத் தலைவருக்கு நெருக்கடி கொடுக்கும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டுள்ளார்.
அமராவதி மட்டுமே தலைநகரம் vs அமராவதியும் ஒரு தலைநகரம் - வெல்லப்போவது யார்?
மேலும், மசோதாக்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை ஒளிபரப்பிய காரணத்துக்காக போலி வழக்குப் பதிவுசெய்து பத்திரிகையாளர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.