ETV Bharat / bharat

'வாயுக்கசிவு விபத்து ஆந்திராவில் வழக்கமான ஒன்றாகிவிட்டது'- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு - ஆந்திரா வாயுக் கசிவு

அமராவதி: விஷவாயக் கசிவு தொடர்பாக ஆந்திர அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால்தான் அந்த விபத்து ஆந்திராவில் வழக்கமான ஒன்றாக மாறிவருவதாக சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

Chandrababu Naidu  Gas Leak  Visakhapatnam  YSRCP Government  Lack of Action  Andhra Pradesh  Naidu blames YSRCP  gas leak incidents in Andhra  ஆந்திர மருந்து நிறுவன எரிவாயு கசிவு விபத்து  எரிவாயு கசிவு விபத்து  ஆந்திரா வாயுக் கசிவு  சந்திரபாபு நாயுடு
'வாயுக்கசிவு விபத்து ஆந்திராவில் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது'- சந்திரபாபு நாயுடு
author img

By

Published : Jun 30, 2020, 10:04 PM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பரவடா பகுதியில் ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டி அமைந்துள்ளது. இங்கு சைனர் பார்மா என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில் ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்த சந்திரபாபு நாயுடு, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆந்திர அரசை விமர்சித்திருந்தார்.

அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில், ”அரசாங்கத்தின் நடவடிக்கை துரிதமாக இல்லாததால் எரிவாயுக் கசிவு நிகழ்வது ஆந்திராவில் வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது. உயரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தவறு செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

  • My heartfelt condolences to the families of the 2 individuals who’ve lost their lives in the gas leak at Sainor Life Sciences in #Vizag. Gas leakages have become a regular feature owing to lack of action and alacrity from the AP Govt. Time to act promptly on erring companies

    — N Chandrababu Naidu #StayHomeSaveLives (@ncbn) June 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவிக்கும் அதேவேளையில், மாநில அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் மே மாதம் 7ஆம் தேதி நடந்த மற்றொரு விஷவாயுக் கசிவு விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு பலப்படுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.