ETV Bharat / bharat

நாகாலாந்து ஆளுநர் ஆர்.என். ரவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதத் தூண்டியது எது?

எல்லை மாநிலத்தில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு ஆளுநர் பதவிக்கு வழங்கப்பட்ட சில அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான தனது நோக்கத்தைக் குறிப்பிட்டு நாகாலாந்து ஆளுநர் ஆர்.என். ரவி, அம்மாநில முதலமைச்சர் நேபியு ரியோவுக்கு கடிதம் எழுதியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஆளுநர்
ஆளுநர்
author img

By

Published : Jul 1, 2020, 6:50 AM IST

நாகாலாந்தில் ஆயுதக் கும்பல்களால் பெரிய அளவிலான மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோத செயல்கள் காரணமாக சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்ற காரணத்தால் மூத்த அரசாங்க அதிகாரிகளை நியமிக்க ஆளுநர் முழு அதிகாரங்களை கோரியுள்ளார்.

இந்த கடிதம் வெவ்வேறு தரப்பினரிடமிருந்தும் கட்சிகளிடமிருந்தும் மாறுபட்ட விமர்சனங்களை பெற்றது. வடகிழக்கில் நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிரமாக செயல்படும் மிகப்பெரிய கிளர்ச்சிக் குழுவான நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சிலின் (NSCN-IM) இசக்-முய்வா பிரிவு, தாங்கள் "முறையான வரிகளை" மட்டுமே விதிக்கிறோம் என்று பதிலளித்தது. மற்ற குழுக்கள் தாங்கள் “பங்களிப்புகளை” மட்டுமே பெறுகிறோம் என்று கூறின.

மலை மாநிலத்தில் வரி விதிக்கும் "அரை டஜன் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் கும்பல்கள்" இருப்பதாக கவர்னர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த குழுக்களில் பெரும்பாலானவை 1980இல் ஷில்லாங் ஒப்பந்தத்தை (1975) எதிர்க்கும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட, பிரிக்கப்படாத நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சிலின் பிரிவுகளாக இருக்கின்றன.

உண்மையில், கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த பல ஆண்டுகளாக நாகாலாந்து மற்றும் மியான்மரின் நாகா பிராந்தியத்தில் ஒரு இணையான அரசாங்கத்தை நடத்தி வருகின்றன. பெரும்பாலும் குழுக்களின் செயல்பாட்டாளர்களால் அல்லது இடைத்தரகர்களால் வணிக நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் வரிகளுக்கான ரசீதுகள் கொடுக்கப்படுகின்றன.

ஆனால் இந்த நேரத்தில் முதல்வருக்கு கடிதம் எழுத ஆளுநர் ஆர்.என். ரவியைத் தூண்டியது எது? கோவிட்-19 இன் தாக்கமா?

கடந்த மூன்று மாதங்களில் நெடுஞ்சாலைகளில் தங்கள் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கிளர்ச்சிக் குழுக்கள் ‘வரி’ விதிப்பது அதிகரித்துள்ளது என்று நாகாலாந்தில் வசிப்பவர்கள் பலர் கருதுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிலர் கடந்த சில வாரங்களில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அதிக ஆட்சேர்ப்பை தொடர்ந்து, அரசாங்கம் விரைவில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்ற ஊகங்கள் எழுந்ததன் விளைவாக நாகாலாந்தில் இந்த அனைத்து அமைப்புகளின் செலவுகளும் தொடர்ந்து உயர்ந்தன. காவல்துறை மற்றும் இராணுவத்தின் நாகா ரெஜிமென்ட்டில் புதிய பட்டாலியன்களில் படைவீரர்கள் சேர்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

அரசாங்கத்திடமிருந்து அனைத்து சலுகைகளையும் பெற தங்கள் குழுக்களை விரிவுபடுத்த இந்த அமைப்புகள் விரும்பின. இது எந்த ஒரு அமைப்பும் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்தபோதெல்லாம் பிராந்தியத்தில் உள்ள மற்ற போராளி அமைப்புகளால் முன்னரே கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. 1992 ஆம் ஆண்டில், சரணடைந்த உல்ஃபா செயல்பாட்டாளர்கள் மற்றும் கிளர்ச்சி அமைப்புடன் தொடர்பு இல்லாத நபர்கள் அடங்கிய போலி பட்டியல்கள் அசாம் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி, அசாம் ரைபிள்ஸ் மற்றும் இராணுவத்தின் ஒருங்கிணைந்த குழு நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் நாகாலாந்து தேசிய சோசலிச சபை NSCN(IM)-ன் ஒரு ரகசிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை முறியடித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இதேபோன்ற ஒரு நிகழ்வை மற்ற குழுக்களும் திட்டமிடப்பட்டிருந்தன என்பது வெளிப்படையான ரகசியமாக மாறியது.

இரண்டாவதாக, இந்த குழுக்களின் வருமானத்தின் பெரும்பகுதி திமாபூரின் வணிக மையத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு விதிக்கப்படும் வரிகளிலிருந்து வருகிறது. நகரில், கடத்தப்பட்ட சீனப் பொருட்களை பெரும்பாலும் விற்கும் ஹாங்காங் சந்தை மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ளதைப் போலவே, கோவிட்-19 மாநிலம் முழுவதும் வணிகத்தை மோசமாக பாதித்துள்ளது, இதன் விளைவாக குழுக்களுக்கு வசூல் குறைந்தது.

எனவே, மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் மாநிலம் வழியாக பொருட்களை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகளை பயன்படுத்திக் கொள்வது தான் குழுக்களுக்கான ஒரே வழியாக இருந்தது. கடந்த நான்கு மாதங்களில் நாகாலாந்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையான உயர்ந்ததில் ஆச்சரியமில்லை.

தீர்வுக்கான வழி என்ன?

நாகாலாந்தில் பல ஆண்டுகளாக நடைபெறும் மோதலுக்கு இராணுவ தீர்வு சரியாக இருக்க முடியாது. ஜம்மு-காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உத்தி வடகிழக்கில் தவறாக இருக்கக்கூடும் என்பதை பாஜக தலைமை புரிந்து கொள்ள வேண்டும்.

நாகாலாந்தில் சமாதான முன்னெடுப்புகள் 1997ஆம் ஆண்டில் நாகாலாந்து தேசிய சோசலிச சபை (IM) அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இறங்கி வந்தபோது தொடங்கியது, அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நாகாலாந்து தேசிய சோசலிச சபை (கப்லாங்) உடன் இதேபோன்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர், ஷில்லாங் உடன்படிக்கையின் போது நிகழ்ந்ததைப் போல அமைதியில்லா மாநிலத்தில் மேலும் சச்சரவுகளை ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்வதற்காக மற்ற அமைப்புகளும் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டன.

கொடி மற்றும் அரசியலமைப்பைத் தவிர அரசாங்கத்திற்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் (நாகா தேசிய அரசியல் குழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) தீர்க்கப்பட்டுள்ளன. நாகாலாந்து தேசிய சோசலிச சபை (IM) தலைமையிலான இந்த குழுக்களில் சில இந்த கோரிக்கைகளை உறுதியுடன் பிடித்துக் கொண்டிருக்கின்றன, அவற்றை ஏற்க அரசாங்கம் தயாராக இல்லை.

நாகாலாந்தில் உள்ள பல மூத்த குடிமக்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் போராளி அமைப்புகளை நடத்துவதை எதிர்க்கின்றன, ஆனால் அவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு பரந்த ஆதரவு உள்ளது. பேச்சுவார்த்தைகள் தீர்க்கப்படாவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழும் என்று நாகா தாய்மார்கள் சங்கங்களின் ஆலோசகர் ரோஸ்மேரி சுவிச்சு கூறினார். "நீண்டகால சமாதான பேச்சுவார்த்தைகளை ஒரு தீர்வுக்கு கொண்டு வருவதிலும், நாகா அரசியல் பிரச்சினையை தீர்ப்பதிலும் மத்திய அரசு தீவிரமாக இருக்க வேண்டும்." என்று மேலும் அவர் கூறினார்.

நாகாலாந்து மற்றும் வடகிழக்கில் உள்ள பிற மாநிலங்களில் சமாதான முன்னெடுப்புகளை ஒரு தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டுவருவதும் அர்த்தமுள்ளதாக இருப்பதால், கிழக்கு கொள்கையை செயல்படுத்துவது உள்ளிட்ட பிராந்தியத்திற்கான லட்சியத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. மியான்மரில் அருகிலுள்ள பகுதிகளில் தற்போதுள்ள சூழ்நிலைகளை மிசோரம் வழங்கவில்லை என்பதால் மியான்மருடனான இணைப்பு மணிப்பூர் மூலமாக மட்டுமே சாத்தியமாகும் என்பதால் நாகாலாந்து முக்கியத்துவம் பெறுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.