பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு (60) கரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவர் விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்தனர்.