உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், அரசுகள் தவிர, அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு உதவலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாஜக சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணப் பணிகள் குறித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பிகார், ஜார்க்கணட், உத்ரகண்ட், ஒடிசா, சத்திஸ்கர், தெலங்கானா மாநில பாஜக தலைவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், அவர், கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது,அரசின் உதவிகள் ஏழை, எளிய மக்களிடம் விராவில் கொண்டுசேர்க்கப்படவேண்டும் எனவும், கரோனா வைரஸ் குறித்த உடனடித் தகவல்களைத் தெரிந்துகொள்ள அனைத்து மக்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பாஜக உருவாகி நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமது கட்சியின் கொள்கைகள் குறித்து ஒவ்வொரு நிர்வாகியும் நாற்பது நபர்களிடம் எடுத்துரைக்கவேண்டும் எனவும், அவர்கள் குறைந்தது பத்து நபர்களிடமாவது கொள்கையை எடுத்துரைக்கவேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், அனைவரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் நிவாரண நிதிக்கு உரிய பங்களிப்பை அளிக்கவேண்டும் என்றார்.
கட்சி நிர்வாகிகள் அனைவரும் மக்களுக்குத் தேவையான சேவைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி, பாஜகவினர் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தற்போதுவரை சிறந்த பங்காற்றிவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘ஆரோக்கிய சேது’ செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்யவேண்டும் - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்!