ETV Bharat / bharat

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: அக்கா மகனை களமிறக்கிய ரங்கசாமி!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பதில் மவுனம் காத்து வந்த என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனது அக்கா மகனுக்குத் தொகுதி ஒதுக்கி உள்ளார்.

author img

By

Published : Mar 25, 2019, 10:53 PM IST

என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன்

ஏப்ரல் 18ஆம் தேதி, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் திமுகவிற்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. திமுக வேட்பாளராக வெங்கடேசன் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்புமனு மனு தாக்கல் செய்தார்.

ஆனால், என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் மௌனம் காத்து வந்த அக்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று பிற்பகல் வரை வேட்பாளர் யார் என அறிவிக்கப்படாமல் அக்கட்சி நிர்வாகிகள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், இன்று பிற்பகல் புதுச்சேரி விவிபி நகரில் உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி திடீரென வேட்பு மனுத்தாக்கல் அலுவலகம் அருகே காரில் வந்து இறங்கினார்.

பின்னர், ரங்கசாமியும், அவருடைய அக்கா மகன் நெடுஞ்செழியனும் காரில் இருந்து பரபரப்பாக இறங்கி தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவர்களுடன் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்து உடனிருந்தார். இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு வந்ததின் காரணமாக இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Rangasamyஎன்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன்

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பதில் மவுனம் காத்து  வந்த என் ஆர் காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி தனது அக்கா மகனுக்கு தொகுதி ஒதுக்கியது  வேட்பு மனு தாக்கலின்போது கட்சியினருக்கு தெரியவந்தது சலசலப்பை ஏற்படுத்தியது

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு  வரும்  பாராளுமன்றத் தேர்தலுடன் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் திமுகவிற்கு, ஒதுக்கப்பட்டது .திமுக வேட்பாளர் வெங்கடேசன் இந்த்தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சி கடந்த வாரம் அறிவித்தது இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களை வேட்பாளர் வெங்கடேசன் சந்தித்து வந்தார் இன்று வேட்புமனு மனு தாக்கல் செய்தார். ஆனால் என் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் மௌனம் காத்து வந்த  அக்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று பிற்பகல் வரை வேட்பாளர் யார் என அறிவிக்கப்படாமல் அக்கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டு எதிர்பார்ப்பு இருந்தது 

இந்நிலையில் இன்று பிற்பகல் புதுச்சேரி வி வி பி நகரில் உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டுறவு பதிவாளர்  அலுவலகத்தில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பிற்பகல் திடீரென வேட்புமனுத்தாக்கல் அலுவலகம் அருகே காரில் வந்து இறங்கினார் .அவருடன் அவரது அக்கா மகன் நெடுஞ்செழியன் இருவரும் பரபரப்பாக காரில் இறங்கி யாரையும் சந்திக்காமல்  தேர்தல் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்வதற்காக அவசர அவசரமாக சென்றனர் . அங்கு தேர்தல் அதிகாரி சுமித்ராவிடம் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அங்கிருந்து பத்திரிகையாளர் யாரையும்  சந்திக்காமல் அவசர அவசரமாக ரங்கசாமி மற்றும் வேட்பாளர் செழியன் ஆகியோர் வேட்புமனு அலுவலகத்திலிருந்து கிளம்பினர். வேட்புமனுத் தாக்கலின் போது அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் வரை வந்திருந்தார் இவர் மீது பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்ததின் காரணமாக  இந்த  தொகுதி காலியானதாக  அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

_TN__PUD_2A _25_NR CONGEES_CANDIDATE_NOMINATION_7205842
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.